உழவர் உரிமை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகாமையில் அமைந்துள்ள செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல மதகுகள் வைக்கப்பட்டுள்ளது
இந்த தடுப்பனையில் மதகுகள் மூடப்பட்டு தண்ணீர் தேங்கினால் மணல் திருடுபவர்களுக்கு வழியில்லாமல் இருப்பதால் இந்த மதகுகளை திருட்டுத்தனமாக கள்ள சாவி போட்டு தண்ணீரை திறந்து வெளியேற்றிவிட்டு மணல் திருடி வருவதாக உழவர் உரிமை இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்
இவ்வாறு அணையில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றினால் சுற்றியுள்ள விவசாய கிணறுகள் வற்றி விவசாயம் பெரிதளவு பாதிக்கப்படுவதாகவும் இதே போல் தற்பொழுது சம்பா நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வரும் வேலையில் இந்த தடுப்பனையிலிருந்து நீரை வெளியேற்றி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கின்றனர்
இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் உழவர் உரிமை இழக்கத்தினர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர் செயற்பொறியாளர் ஹரிஹரன் இடம் பலமுறை முறையிட்டும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் நேரில் சென்று விவசாயிகள் கேட்டாள் நான் காவல்துறையிடம் கடிதம் வைத்துள்ளேன் என கூறி மெத்தனம் காட்டுவதாக கூறுகின்றனர் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் உழவர் உரிமை இயக்கத்தினர் செய்யாற்று குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மீது நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி