பழைய இரும்பு கடையில் மர்ம நபர்கள் தீவைப்பு

64பார்த்தது
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருபவா் காதா் பாஷா. இவா், வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
நேற்று அதிகாலை கடையில் தீப்பற்றியது.

தகவல் அறிந்து காதா் பாஷா வந்து பாா்த்தபோது கடை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.

இவா், உடனடியாக செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதனால் அப்பகுதியில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும், கடையில் இருந்த இரும்பு, நெகிழிப் பொருள்கள் தீயில் எரிந்து கருகியதாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி