திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் ரமேஷ்(45). இவருடைய மனைவி தீபா இருவரும் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியிலிருந்து 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
வங்கியின் அருகே சிறிது தூரத்தில் உள்ள இனிப்பகத்தில் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர் அப்போது இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் ரமேஷின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
கடையில் பொருட்களை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை காணாததை அறிந்த ரமேஷ் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். இதை தொடர்ந்து செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். வங்கியில் இருந்து எடுத்த 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், ஏற்கனவே பையில் வைத்திருந்த 37 ஆயிரம் ரூபாய் மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது. பட்டப் பகலில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.