திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தொலைபேசியில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனைகள் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் 100 தொலைபேசியில் மர்ம நபர் ஒருவர் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியதை தொடர்ந்து திருவண்ணாமலை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகம் , கிளைச் சிறைச்சாலை வளாகம் , சார் பதிவாளர் வளாகத்தில் மற்றும் அலுவலகங்களின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.