போலி நகை விற்க முயன்றவர்கள் கைது

56பார்த்தது
செங்கம் அடுத்த முறையார் பகுதியில் விழுப்புரம் மாவட்டம் அம்மன் குப்பம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் இரண்டரை கிலோ போலி தங்க பொட்டு காசு 36 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி விற்கப் போவதாக
திருவண்ணாமலை மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இவர்களை மடக்கி பிடிக்க போலீசார் தனி பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு
முறையார் பகுதியை சுற்றி வளைத்து கண்காணித்து காத்து வந்தனர்.
அப்போது குடும்பத்துடன் வெளியூர் செல்வது போல் முறையார் பகுதியில் வந்து நின்ற ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கி தர்மலிங்கம் சுற்றி வளைத்து பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அருகில் இருசக்கர வாகனம் வந்து நின்றது அதில் நகையை வாங்க சென்னையில் இருந்து வந்த கமல் ராம்குமார் இருவரும் இறங்கி தர்மலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த போது காவல்துறையினர் திடீரென சுத்திவளைத்தனர்.
இதில் சுதாரித்துக் கொண்ட கமல் ராம்குமார் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர். இதில் தர்மலிங்கம் உட்பட காரில் இருந்த ஐந்து பேரையும் சேர்த்து காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் மிகுந்த இரண்டு கிலோ போலி தங்க பொட்டு காசையும் பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இவர்கள் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி