

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மலர் தூவி மரியாதை (Video)
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திடீரென அவர் காரில் வந்து இறங்கியதை பார்த்த அப்பகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில நிமிடங்களில் விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. நன்றி: நியூஸ்தமிழ்