எழுச்சி பெறுமா CSK? லக்னோ அணியுடன் இன்று மோதல்

52பார்த்தது
எழுச்சி பெறுமா CSK? லக்னோ அணியுடன் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (ஏப்.14) நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய CSK அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி மீண்டும் எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி