திருச்சி மாவட்டம், முசிறி - பவித்திரம் வழித்தடத்தில் புதிய பேருந்து எம்எல்ஏ இயக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முசிறி கிளையின் சார்பில் முசிறி - பவித்திரம் வழித்தடத்தில்
புதிய பேருந்து துவக்க விழாபுதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து கொடி அசைத்துபுதிய பேருந்தை இயக்கி வைத்தார்.
கோட்ட மேலாளர் ஜேசுராஜ்,
கிளை மேலாளர் ரமேஷ், துணை மேலாளர் (இயக்கம்)
ராஜேந்திரன்,
உதவி பொறியாளர் (வணிகம்)கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பேருந்து முசிறியிலிருந்து
மணமேடு, கொளக்குடி, வழியாக தினமும் ஐந்து முறை சென்று வரும் எனவும், இது ஒரு மகளிர்விடியல்பயணம் பேருந்துஎனவும் தெரிவித்தனர். பேருந்து துவக்க விழாவில் திமுக நிர்வாகிகள், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.