பாமக, தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என்று பாஜகவின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜக தேசிய தலைமை பாமக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தும். 2023இல் தேமுதிக, அதிமுகவுடன் இணைந்தது. நாங்கள் அனைவரும் முன்பு ஒரே கூட்டணியில் இருந்துள்ளோம். நாங்கள் மீண்டும் அதைச் சரிசெய்வோம் என தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என பாஜக ஏற்கனவே அறிவித்துவிட்டது.