துறையூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை

84பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பொழிந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு மேலாகவே துறையூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பொதுமக்கள் புளுக்கத்தில் வாடி வந்தனர். இன்று திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. துறையூர் நகர் மற்றும் அருகே உள்ள பெருமாள்மலைஅடிவாரம் கீரம்பூர் நாகலாபுரம் செங்காட்டுப்பட்டி காளிப்பட்டி அம்மாபட்டி சொரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி