கள்ளக்குறிச்சியை சேர்ந்த அலெக்ஸ் விஜய் (25) - அருள் மேரி (22) தம்பதிக்கு அந்தோணி என்ற கைக்குழந்தை உள்ளது. மனைவி, மகனுடன் விஜய் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.13) பைக்கில் சென்ற போது வேன், பைக் மீது மோதியது. இதில் மேரியும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் கதிரேசனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.