தமிழ் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. 9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்த சோழ ஆட்சி காலத்தில், தமிழ் புத்தாண்டு முதன் முதலாக தோன்றியது. இந்த காலத்தில் தான் தமிழ் காலண்டர் உருவாக்கப்பட்டது. மேலும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டது.