
முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தந்தை, மகனை கொன்ற வழக்கில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் நடந்த கலவரத்தில் நவ.1, 1984 அன்று ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். சஜ்ஜன் குமார் கலவரக்காரர்களை தூண்டியதே இக்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.