சித்திரை முதல் நாளான இன்று (ஏப்., 14) கிரகங்களின் அதிபரான சூரிய பகவான் தனது உச்ச ராசியான மேஷத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் சிம்மம், கடகம், தனுசு ஆகிய ராசியினருக்கு சூரியனின் ராசி மாற்றம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும், செல்வம் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.