
தாயின் வெகுநாள் ஆசையை நிறைவேற்றும் நடிகர் பிரபுதேவா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடன இயக்குநராகவும் இருப்பவர் பிரபுதேவா. இயக்குநராகவும் சாதித்துள்ள இவர் தனது தாயாரின் வெகுநாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரான கெம்பாலு கிராமத்தில், மகாதேஸ்வர சுவாமி கோயிலின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கோயிலை புனரமைப்பதற்காக அவர் கோயில் நிர்வாகத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.