ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப். 13) நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. இப்போட்டியில் மும்பை வீரர் ரிக்கல்டனை, குல்தீப் யாதவ் கிளீன் போல்ட் ஆக்கிய வீடியோ பெரியளவில் வைரலாகியுள்ளது.