இன்ஸ்டாகிராமில் அதிக Follower-களை கொண்ட அணியாக உருவெடுத்தது பெங்களூரு அணி. இன்ஸ்டாவில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை CSK அணி அண்மையில் படைத்தது. CSK அணியை RCB வென்றதன் மூலம் அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து, 17.7 மில்லியன் Follower-களுடன் CSK அணி முதலிடத்தில் இருந்த நிலையில், 17.8 மில்லியன் Follower-களைப் பெற்று முதலிடத்திற்கு RCB அணி முன்னேறியது.