பிரதமர் மோடி, வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வருகை தரும் நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.