சேலம் மாவட்டத்தில் நாய் கடித்ததை வீட்டில் கூறாமல் இருந்த சிறுவனுக்கு ரேபிஸ் நோய் பாதித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் கிஷோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவனுக்கு, கடந்த 28ஆம் தேதி திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, சிறுவனுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நாய் கடித்து பல நாட்களாகியும் சிறுவன் பெற்றோரிடம் கூறாமல் இருந்ததால் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.