தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலை தணிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்!” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் முதலமைச்சர் தனது வீட்டு மாடியில் உள்ள பறவைகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.