மதுரை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களில், அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருக்கும் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 12 வாரங்களுக்குள் கொடி கம்பங்களை அகற்றவும் அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், கோ புதூர், அண்ணாநகர், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.