பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஆசிரியரை ரவுண்டு கட்டி அடித்த உறவினர்கள்

71பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், 4 ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி