உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டா, செக்டர் 94-ல், லம்போகினி கார் ஒன்று, சாலையோரம் நடந்து சென்ற கட்டுமான பணியாளர்கள் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரிடம் பலரும் வாக்குவாதம் செய்தனர். அப்போது, அஜ்மரை சேர்ந்த ஓட்டுநர் தீபக், "யாரும் இறந்துவிட்டார்களா என்ன?" என அவரின் பாணியில், அலட்சியமாக கேள்வி எழுப்பி அதிர்ச்சி கொடுத்தார். தற்போது தீபக் கைது செய்யப்பட்டார்.