இத்தாலி நாடானது அதன் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் போனது. குறிப்பாக செல்லப்பிராணிகள் தொடர்பில் சில விசித்திரமான சட்டங்களையும் கொண்டுள்ளது. உதாரணமாக, டுரின் நகரில் கடந்த 2005-இல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது வாக்கிங் நடக்க வைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படலாம்.