ஒடிசாவில் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரயில்

60பார்த்தது
ஒடிசாவில் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரயில்
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே காமாக்யா விரைவு ரயிலின் (12551) 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மாங்குலி என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேற்று காலை காமாக்யாவில் இருந்து புறப்பட்ட ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் விபத்தால் கட்டாக் ரயில் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

தொடர்புடைய செய்தி