கடலூர்: திட்டக்குடி அருகே விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில், சிலர் கள்ளநோட்டு அச்சடித்து வந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருந்த ரூ.85000 கள்ளநோட்டு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர். மேலும், இடத்திற்குச் சொந்தக்காரரான செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செல்வத்தை அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விசிக நீக்கியுள்ளது.