கிரீஸ் நாட்டின் ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் மற்றும் எபிடாரஸ் தியேட்டர் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த காலணிகள் பழங்கால பாரம்பரியத்திற்கு கேடு விளைவிப்பதால் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதன்படி அந்த பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மென்மையான காலணிகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர்.