ஒரே வீடியோவால் தர்ப்பூசணி விலை சரிவு.. விவசாயிகள் வேதனை

57பார்த்தது
ஒரே வீடியோவால் தர்ப்பூசணி விலை சரிவு.. விவசாயிகள் வேதனை
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மற்றும் அதன் அருகேவுள்ள மாவட்டங்களில், 7,000 விவசாயிகள், 14,000 ஏக்கருக்கு மேல் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளனர். தர்ப்பூசணி 1,000 கிலோ, ரூ.14,000 வரை விற்பனையானது. ஆனால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய தர்ப்பூசணி குறித்து வீடியோ போட்டதால், ரூ.3,000 ஆக விலை குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அறுவடை செய்யும் போது, தர்ப்பூசணி இளஞ்சிவப்பிலும், ஐந்து நாட்களுக்கு பிறகு அடர் சிவப்பிலும் மாறுவது அதன் இயல்பு என விவசாயிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி