மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், மராத்தவாடா மசூதியில், கடந்த 29ம் தேதி குண்டு வெடித்தது. விசாரணையில், விஜய் கவ்ஹானே, ஸ்ரீராம் ஷங்கடே ஆகியோர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குவாரியில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தும், ஜெலட்டின் குச்சிகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து நபர்கள், அதிர்ச்சி செயலை அரங்கேற்றியுள்ளனர். பழமையான மசூதி என்பதால், ஜெலட்டின் குச்சி வெடித்தபோது உயிர்சேதம், காயம் இல்லை. கட்டிடம் லேசான விரிசல் விட்டது. குற்றவாளிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.