தொட்டியம் போலீசார் சீலை பிள்ளையார் புத்தூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை மூட்டைகள். இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரில் போதை புகையிலை மூட்டையுடன் வந்த நபர் தொட்டியம் தாலுகா காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. மேலும் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி கிராமத்தில்
போதை புகையிலை மூட்டைகளை குடோன் ஒன்றில் மறைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராஜசேகரனை குடோனுக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குடோனில் இருந்த சுமார் ஒரு டன் எடையிலான, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பாக்குகள் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் எடுத்துவரப்பட்டது.
ராஜசேகரனிடம் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தொட்டியம் தாலுகா எம். புத்தூர் அர்ஜுனன் மற்றும் பாலசுப்ரமணியன் , கரூர் நகரைச் சேர்ந்த சந்துரு ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ராஜசேகர்,
அர்ஜுனன், பாலசுப்ரமணியன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.