ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியானது. இதில் வாய்ப்பு கிடைக்காத பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், பாஜக முன்னாள் எம்எல்ஏ சசி ரஞ்சன் பர்மர், செய்தியாளர் பேட்டியின் போது கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 'எனது பெயர் இருக்கும் என்று நினைத்தேன்' என பேசும்போதே அவர் கண்ணீர் வடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.