விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், லட்டு போன்ற பலகாரங்களை செய்து பிள்ளையாருக்கு படைத்து வழிபடுவோம். இதில், வேக வைத்து தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளே சத்தானது. ஏனெனில் ஆவியில் வேக வைக்கும் போது, அதில் உள்ள சத்துக்கள் அப்படியே தக்க வைக்கப்படுகின்றன. மேலும் ஆவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு மென்மையாக இருப்பதோடு, எளிதில் செரிமானமாகி, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.