கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் மட்டன் பிரியாணி, வாழைப்பழ சிப்ஸ் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மட்டன் பிரியாணி ரூ.100-க்கும், வாழைப்பழ சிப்ஸ் கிலோ ரூ.260-க்கும் விற்கும் மாநிலத்தில் உள்ள ஒரே சிறைச்சாலை இதுதான். ஆட்டிறைச்சி விலை உயர்வு, சிறைக்குள் வாழைப்பழ உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகளால் தயாரிக்கப்படும் இவை பொதுமக்களுக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.