சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்போக்கு சொற்பொழிவு நிகழ்த்திய மகாவிஷ்ணு என்கிற சொற்பொழிவாளரை தட்டி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த அவர், கல்விக்கு ஒவ்வாத கருத்துக்களை பேசுவதை ஒரு காலம் ஏற்க முடியாது. படிப்பு தான் ஒருவருக்கு உயர்வை கொடுக்கும்” என்று பேசினார்.