பகீர் வீடியோ.. வெடித்து சிதறிய சிலிண்டர் (வீடியோ)

75பார்த்தது
கும்பகோணம் மாவட்டம் மடத்துத் தெருவில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெருப்பு எரிந்துகொண்டிருந்தபோது, கடைக்குள் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடிச்சென்றனர். பின்னர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி