பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விவசாயம் தொடர்பான 7 திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவதாக அறிவித்துள்ளது. இந்த 7 திட்டங்களுக்கு மொத்தம் ரூ.14,000 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது. இதில், டிஜிட்டல் வேளாண்மை பணிக்கு ரூ. 2,817 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், பயிர் அறிவியலுக்கு ரூ.3,979 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய கல்வி மற்றும் மேலாண்மைக்காக ரூ.2,291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.