நடு ரோட்டில் தாக்கி ரகளையில் ஈடுபடும் பரபரப்பு காட்சி

70பார்த்தது
பூந்தமல்லி அருகே வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் மது அருந்திய மூன்று நபர்கள் குடிபோதையில் இளைஞர் ஒருவரை நடு ரோட்டில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட நபர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இருப்பினும் விடாது மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கொலை வெறியுடன் தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட நபர் மூச்சுப்பேச்சு இன்றி ரத்தம் சொட்ட சொட்ட சாலையிலேயே படித்து கிடந்தால் பின்னர் இது குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து குடிபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடிவிட இருவரை மட்டும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் நடு ரோட்டில் மூன்று பேர் சேர்ந்து ஒரு நபரை கொலை வெறியுடன் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி