திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா. தாஸ் பேசுகையில் தேர்தல் நேரத்தில் திராவிட மாடல் அரசு அறிவித்த 509 வாக்குறுதிகளில் 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில் அதில் அடங்கிய 309 வாக்குறுதிகள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகள் அடங்கியது எனவே தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதை தமிழக அரசு பணிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பணி நியமனம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஜாக்டோ ஜியோ வின் நியாயமான கோரிக்கைகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்