சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில் ரோகு எனப்படும் கெண்டை இனத்தை சேர்ந்த மிகப்பெரிய மீன் ஒன்றின் வாயில் நபர் ஒருவர் பீர் ஊற்றுவது பதிவாகியுள்ளது. சமைத்து சாப்பிடுவதற்காக வாங்கப்பட்ட அந்த மீன் உயிரோடு இருந்துள்ளது. அந்த மீனை கையில் தூக்கிய அந்த நபர் அதன் வாயில் பீரை ஊற்றியுள்ளார். அந்த மீனும் தண்ணீர் குடிப்பது போல பீரை குடித்துள்ளது. இதனை கண்ட நெட்டிசன்களில் சிலர் அதனை வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் இது மிருக வதை என குற்றம்சாட்டி வருகின்றனர்.