கர்நாடகா: சித்ரதுர்கா மாவட்டத்தில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடிலிகி தாலுகா அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அனந்தம்மா என்ற அப்பெண், சிவராத்திரி விழாவுக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் 2 சிறார்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் சாலையை கடந்தபோது இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே கார் மோதி அப்பெண் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.