பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்க உள்ளார். இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தின் பூஜை வருகிற மார்ச் 6-ம் தேதி பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பூஜையின் போது 15 அடி உயர அம்மன் சிலை அமைத்து, பக்தி பாடகர்களையும் வரவழைத்து, அன்னதானம் ஏற்பாடு செய்து பூஜையை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.