வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பாக தர்ணா போராட்டம்

75பார்த்தது
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயில் முன்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் 35 ஆயிரம் ஆரம்ப நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 

ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் மின்வாரிய ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி