மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பல இடங்களில் பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழிக்கின்றனர். இந்நிலையில் தென்காசி கடையநல்லூரில் உள்ள ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தியை அழிப்பதாக கூறி ஆங்கிலத்தை திமுகவினர் அழித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.