தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். தவெகவின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா நாளை பிப்.26 மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பிரஷாந்த் கிஷோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உடனிருந்தனர்