ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிகமாக பணியாற்றிவரும் சத்யா, தனது பணியை வரன்முறை செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக ஆஜரான அரசு தரப்பு, தமிழக அரசு துறைகளில் 2020 நவ.,28 ம் தேதி முதல் தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு தற்காலிகமாக அரசு பணியில் சேர்ந்தவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.