மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக போராட்டம்

80பார்த்தது
பொன்னேரியில்
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டம்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ரமேஷ் ராஜ் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பி பேரணியாக சென்று பிஎஸ்என்எல் செல்போன் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மதிமுக விடுதலை சிறுத்தை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற முற்றுகை போராட்டம்
காரணமாக காவல்துறையினர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி