ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் ஷட்டில் காக் விளையாடிவிட்டு அங்கிருந்த மேஜையில் சென்று அமர்ந்த சுப்பிரமணியம் என்ற நபர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை அவசரஅவசரமாக அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.