இணையத்தில் வைரலாகும் வீடியோவில், புத்திசாலித்தனமான காகம் ஒன்று ஒரு முதியவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தைத் திருடியுள்ளது. அந்த காகமானது பணத்தைத் திருடிக்கொண்டு எங்கும் செல்லாமல், அந்த முதியவரின் முன்னே நின்றுகொண்டு விளையாட்டு காட்டியபடி இந்த வீடியோவில் இருக்கிறது. மேலும் சிறிது நேரம் பணத்தை வாங்க முயன்ற முதியவரால் முடியவில்லை. பின்னர் ஒரு பெண் வந்து வாங்க முயன்றபோதும் அவரால் வாங்க முடியவில்லை.