செவ்வாய் கிரகத்தில் தரவுகள் படி, 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில், கடற்கரை இருந்திருக்கக்கூடும் என்றும், கிட்டத்தட்ட பாதி கிரகத்தை அந்த கடல் மூடியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. முதன்முதலில், 1970களில் நடத்தப்பட்ட ஆய்வில், நாசாவின் மரைனர் 9 ஆர்பிட்டரிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர் செதுக்கப்பட்ட மேற்பரப்புகளை வெளிப்படுத்தின. சீனாவின் ஜூராங் ரோவர் செவ்வாய்க் கிரகத்திலிருந்து அனுப்பிய தகவலின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.