இந்த வகை ஆடுகள் வளர்த்தால் கொள்ளை லாபம் கிடைக்கும்
சிகு இன ஆடுகள் உத்தரப்பிரதேசத்திற்கு வடக்கேயும், இமாச்சல பிரதேசத்தின் வடகிழக்கு பகுதிகளிலும் கம்பளி மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. வெள்ளை, பழுப்பு, இளஞ்சிவப்பு, சாம்பல் ஆகிய நிறங்களில் இந்த ஆடுகள் காணப்படும். நன்கு வளர்ந்த கிடா 39 கிலோவும், பெட்டை ஆடு 26 கிலோ உடனும் காணப்படும். இந்த ஆடுகள் தோராயமாக 69 கிலோ அளவிற்கு பால் கொடுக்கும். உப்பு மூட்டை போன்ற சிறிய அளவு சுமைகளை தூக்கிச் செல்லவும் இது பயன்படுகிறது.